நகலகம் எப்படி லாபகரமாக நடத்துவது

நகலகம் எப்படி லாபகரமாக நடத்துவது


நகலகம் நடத்துவது என்றால் சற்று கடினம் தான் ஒரே ஒரு ஜெராக்ஸ் மிஷினை வைத்துக்கொண்டு அதில் வரும் மிக சொற்பமான லாபத்தைக் கொண்டு குடும்பம் லாபம் ஈட்டுவது கடினம். அதற்காக நாம் சில மதிப்புக்கூட்டு செயல்முறைகளை செய்ய வேண்டும்,. அப்படி என்றால் ஒரு நகல் எடுப்பதற்கு 2 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம், அதற்கு நாம் குறைந்த பட்சமாக நாள் ஒன்றுக்கு 500 பிரதிகாளாவது எடுக்க வேண்டும்.


நகல் உருவாக்கம் நாமே நகலை உருவாக்கினால், நகல் தயாரிப்பில் இரண்டு மடங்கு அதிகப்படுத்தலாம், அதாவது கனிணி வழியாக னுகூஞ றுடிசன ஞசடிஉநளளேைப தட்டச்சு செய்யலாம். தட்டச்சு செய்ய தெரியாதவர்களுக்கு, தட்டச்சு செய்ய தேவைப்படுவோர்க்கு, பாமர மக்களுக்கு அரசாங்கத்தில் பெறவேண்டிய விண்ணப்பங்களை உருவாக்கி அதனை அதாவது, முதியோர் பென்ஷன், குடும்ப அட்டை பெற தேவையான விண்ணப்பங்கள் போன்ற வற்றை செய்து கொடுத்தால் அதற்கான கட்டணம் பெற்றுக்கொள்ளாம். உங்கள் திறமைக்கு, ஒரு பக்கத்திற்கு 40 முதல் 50 ரூபாய் வரை பெறலாம். இது போன்ற சேவைகள் வழங்க பத்திரப்பதிவு அலுவலங்கள் அருகாமையில் அமைத்தல் நலமாகும்.


ஸ்பைரல் பைண்டிங்


பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் செய்பவர்கள் பல பக்கங்களைக் கொண்ட தாள்களை ஒன்றாக்கி தரும்படி கேட்பார்கள் அதற்கு நாம் பைண்டிங் செய்து தருவாதனால் ஒரு கணிசமான வருவாய் கிடைக்கும். மாணவர்களுக்கு தேவைப்படும் Soft Binding, Hot Binding, Comb Binding Project Binding போன்ற வேலைகள் செய்து வருவாய் பெருக்கிக்கொள்ளாம்.


லேமினேஷன்


ஆவணங்களை பத்திரப்படுத்த லேமினேஷன் ஒரு சிறந்த முறையாகும் இது ஆவனங்களை பழுதுபடாமல் காக்கும்.இருக்க எதனை எல்லாம் லேமினேஷன் செய்யலாம் என்றால் குறிப்பாக பிறப்பு சான்றிதழ் நிலம் சொத்து போன்ற ஆவணங்களில் நகல்களை பாதுகாக்க லேமினேஷன் செய்து கொடுக்கலாம் இதில் நமக்கு ஒரு சிறு வருவாய் கிட்டும். இப்படியாக நாம் ஒரு மதிப்பு கூட்டு செயல்முறைகள் நமத்கு வருவாய் அதிகம் கிடைப்பதோடு நமக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் நம்முடனே இருப்பார்கள் அவர்களுக்கு சேவை செய்வதன் பொருட்டு நமது ஏரியாவில் மக்கள் வாடிக்கையாளர்கள் ஆகியோரிடமிருந்து நல்ல மதிப்பும் நம்பிக்கையும் கூடும் தொடர்ந்து வருமானமும் பெருகும்.