N படிப்பொறி (Xerox) கடைகாரர்களுக்கு அரசு மின் கட்டண சலுகை கிடைக்குமா?

அனைவருக்கும் அரசாங்கம் தான் வேலை கொடுக்க வேண்டும் என்றால் அது இயலாத காரியம் அப்படி அரசாங்கத்தை வலியுறுத்துவதும் மடமை என்பதனை உணர்ந்த படித்த பட்டம் பெற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் செய்தோ அல்லது சுயமாக தொழில் தொடங்கியவரிடத்தில் வேலைக்கு சேர்ந்தோ அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வதோடு மட்டுமின்றி இந்தியாவின் பொருளாதாரத்தையும் உயர்த்தி சமூகத்தில் நல்ல நிலையை அடைந்து கெளரவமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிக்கிறார்கள். சில விதி விலக்குகளும் உண்டு. மேலே குறிப்பிட்டபடி படித்த பட்டதாரிகள் பலருக்கு சுய தொழில் தொடங்க வாய்ப்பு வழங்கிய படிப்பொறி துறை இப்போது பல்வேறு இன்னல்களுக்குட்பட்டு அழிந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலான பேர் படிப்பொறி சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டுள்ளனர். இத்தொழில் நசிந்தால் பல குடும்பங்களின் வாழ்வு கேள்விக்குறிதான். இந்த இக்கட்டான நிலை களைய வேண்டி நம்முடைய போட்டோ காப்பியர் டாக் என்ற மாத இதழ் உங்களை எல்லாம் அழைக்கின்றது. அனைவரும் ஒன்றாக இணைந்து ஒருமித்த குரலில் நம்முடைய கருத்துக்களை எடுத்துரைப்போம் அதன் வழி ஏற்றம் காண்போம்.


தொழிலை அழிக்கும் காரணிகளாக இத்தொழில் செய்து வரும் அனைவரும் சொல்லும் பதில் இத்தொழிலில் வரும் வருமானம் நிலையற்றதாக உள்ளது. ஒரு நாள் பணம் கிடைத்தால் பல நாட்கள் பணம் கிடைக்காமல் போகிறது. அதனால் இத்தொழிலை நம்பி நாங்கள் எதையும் செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்கள். அப்படியானால் நமக்கு என்று ஒரு சங்கம் ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலமாக, அரசாங்கம் இதைப் போன்ற தொழிலாளர்களின் நலன் கருதி ஏற்படுத்தி வைத்திருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர் நல இணைத்துக் கொண்டால் நலம் பயக்கும். அதை கடைக்காரர்கள் அனைவரும் விரைந்து செய்ய வேண்டும் என்று இக்கட்டுரையின் மூலம் உங்களை எல்லாம் இத்தொழில் செய்வோரின் நலன் விழைவோன் என்ற முறையிலும் உங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். --


அடுத்ததாக தொழில் போட்டி கடை நடத்துபவர்களுக்கு இடையேயான போட்டியால் இத்தொழிலில் இலாபம் என்பது மிகவும் குறைந்து கைக்செலவுக்கு காசு (Rotation) வந்தால் போதும் நிலையில் தொழிலை நடத்திக் பணம் சம்பாதிப்பவர்களே, இத்தொழிலையே நம்பியிருக்கும் பல இலட்சம் குடும்பங்களை வாழ விடுங்கள் வாழ்வாதாரம் வேண்டி இத்தொழிலை வந்த பலர் இருந்த இடம் தெரியாமல் போன வரலாறும் இத்துறையில் அதிகமாக உள்ளதுஅதற்கு காரணம் போட்டி என்ற பெயரில் விலை குறைத்தது தான் பல இடங்களில் படிப்பொறி வைத்து படி எடுத்துக் கொடுக்கும் நிறுவனங்களை வருபவர்கள் தங்களுக்கு சங்கம் அமைத்து பேசி விலை நிர்ணயம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த விலை படி எடுக்க வருபவர்களையும் பாதிக்காமல் நிறுவனத்தாரையும் பாதிக்காமல் நல்லதொரு தொழிலாக செய்துக் கொண்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த படி எடுக்கும் கடைக்காரர்கள் அவர்களுக்கென ஒரு நலச்சங்கம் வைத்திருக்கிறார்கள் அதன் தலைமையிடம் ஓசூரில். Chennai